நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

திருடர்களை பிடிக்க முயன்றபோது ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுடப்பட்டு உயிரிழந்தார்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் உயிரிழந்துள்ளார். 

திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த  ஜானி வாக்டர் (வயது 37) உயிரிழந்துள்ளார். 

தனது காரில் இருந்த கருவியை திருட முயன்ற திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் நடிகர் உயிரிழந்தார். 

ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொலைக்காட்சி தொடரில் பிராண்டோ கார்பின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜானி.

அதனைத்தொடர்ந்து சைபீரியா, கிரிமினல் மைண்ட் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். 

திரைப்படங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் நெடுந்தொடர்களிலும் இவர் நடித்து வந்தார். 

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாகத் திரையில் தோன்றியவர், தற்போது வரை நல்ல அந்தஸ்த்தை பெற்று இருந்தார். 

இந்நிலையில், நேற்று இவர் தனது வீட்டில் நண்பருடன் இருந்தார். அச் சமயம் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இவரின் காரில் இருந்த பொருளை திருட முயற்சித்துள்ளது. 

இதனை கவனித்த நடிகர், அவர்களை கண்டிக்க சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset