நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ராஜ் கமல் ஃபிலிம்ஸ் அறிவிப்பு 

சென்னை: 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளார். 

இந்திய சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அமரன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது இப்படம் செப்டமர் 27ஆம் தேதி வெளியாகும் என்று ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

DAY IS DONE என்ற ஆங்கில வாசகத்துடன் அமரன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தமது எக்ஸ் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset