நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் கார்த்தி சிவக்குமாரின் 26ஆவது படம் வா வாத்தியார்: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார் 

சென்னை: 

நடிகர் கார்த்தி சிவக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமது 26ஆவது படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியானது.

அவ்வகையில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

நடிகர் கார்த்தி குறைவான படங்களில் தற்போது வரை நடித்திருந்தாலும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார்.  இதனால் அவரின் ஏனைய படங்கள் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. 

நடிகர் கார்த்தியின் 47ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த அறிவிப்பினை வெளியிட்டு அவரின் ரசிகர்களை ஆனந்தத்தில் திளைக்க செய்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset