நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகவியலாளர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கின்றது: ஃபஹ்மி ஃபட்சில்

கூச்சிங்:

கூச்சிங்கில் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் 2024-ஆண்டு தேசிய ஊடகவியளார்கள் தினம் (ஹவானா)-வில் நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் நல்ல செய்திகளை அறிவிக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 

மே 27-ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் ஹவானா நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு நல்ல செய்திகளைப் பிரதமர் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

நாளை முதல் நடைபெறும் ஹவானா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாகவும் சுமூகமாகவும் நடந்ததாக ஃபஹ்மி கூறினார்.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த ஆறு ஊடக நிறுவனங்கள் உட்பட சர்வதேச ஊடகவியலாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். 

நிலையான நெறிமுறைக்கேற்ப ஊடகவியலாளர்கள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset