நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மாலத்தீவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு உள்நாட்டு கரன்சி: இந்தியா - சீனா ஒப்புதல்

மாலே:

இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக அவரவர் உள்நாட்டு கரன்சி மூலம் பணம் பெற்றுக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்தாக மாலத்தீவு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது சயீது தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து 78 கோடி டாலர் மதிப்பிலும் சீனாவிடம் இருந்து 72 கோடி டாலர் மதிப்பிலும் இறக்குமதி வர்த்தகத்தில் ஆண்டுதோறும் மாலத்தீவு ஈடுபட்டு வருகிறது.

அரசு ஊடகத்துக்கு அமைச்சர் சயீது கூறுகையில், இந்தியா மற்றும் சீனாவுடனான நமது வருடாந்திர இறக்குமதி வர்த்தக மதிப்பு 140 முதல் 150 கோடி டாலர் வரை இருக்கும்.

இந்தப் பரிவர்த்தனைகளுக்கு உள்நாட்டு கரன்சி மதிப்புகளில் பணம் செலுத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருநாடுகளிடமும் பேசி வருகிறோம்.

இதன்மூலம், நம்மால் ஆண்டுதோறும் சுமார் 7.5 லட்சம் டாலர் சேமிக்க முடியும். மேலும், டாலருக்கான தேவை வருங்காலத்தில் படிபடியாக குறையும்' என்றார்.

இதன்மூலம், மாலத்தீவு அரசால் ஆண்டுதோறும் சுமார் 7.5 லட்சம் டாலர் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset