நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் ஹெரிடேஜ் ஹவுஸ் உணவகம் திறப்பு விழா கண்டது

கோலாலம்பூர்:

ஹெரிடேஜ் ஹவுஸ் உணவகம் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அதிகாரப்பூர்வகாக திறப்பு விழா கண்டது. இந்த உணவகத்தை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் திறந்து வைத்தார்.

ஆந்திரா, தெலுங்கானா, ராயல்சீமா ஆகிய 3 இடங்களின் பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்க விரும்புவோர்கள் பிரிக்பீல்ட்ஸ் செண்ட்ரல் ஸ்வீட்ஸ் வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த புதிய உணவகத்திற்கு செல்லலாம்.

உணவில் மட்டுமல்லாமல் தரத்திலும் சிறந்த தேவையை உங்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அழகான சூழலில் தரமான உணவு வகைகளை ருசிக்க ஹெரிடேஜ் ஹவுஸ் உணவகத்தை ராகுல் வர்மா, பிரியங்கா நால்கரி தம்பதியினர் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைத்துள்ளனர்.

இந்த ஹெரிடேஜ் ஹவுஸ் உணவகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உணவை ருசி பார்த்த டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அருஞ்சுவை உணவின் ருசியில் மகிழ்ச்சி கொண்டு ருசியான ஆந்திரா, தெலுங்கானா, ராயல்சீமா உணவு சாப்பிட வேண்டும் என்றால் ஹெரிடேஜ் ஹவுஸ் நிச்சயம் வாங்க என்று கூறிச் சென்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset