நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காபூல் விமான நிலையத்திற்கு பணிக்குத் திரும்பிய ஆப்கானிஸ்தான் பெண்கள்: தலிபான்கள் அனுமதி

காபூல்:

தலிபான் அமைப்பினர், பெண்களுக்கு எதிராகப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து கூறி வரும் வேளையில் தலிபான் அமைப்பினர் பெண்களை வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர்கள் மிகவும் கொடுமையானவர்கள் என்ற தோற்றத்தைக்  கட்டமைப்பதில் இந்திய ஊடகங்கள் உட்பட அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை சொல்லி வருகின்றன. 

இந்த நிலையில் ராபியா ஜமால் என்னும் 35 வயதுப் பெண் காபூல் விமான நிலையத்திற்குப் பணிக்குத் திரும்பியுள்ளார்.

3 பிள்ளைகளுக்குத் தாயான ராபியா, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குத் திரும்பியதாக AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Taliban's capture of Kabul forces many to flee to the airport as Afghanistan's  women fear for their future - ABC News

வேலைக்குத் திரும்பினால் தான் தமக்கு நிம்மதி என்றும் அவர் தெரிவித்தார்.

தலிபான் படையினர் காபூலை கடந்த மாதம் 15ஆம் தேதி கைப்பற்றினர்.

அதற்கு முன் காபூல் விமான நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலையில் இருந்தனர்.

ஆனால் இப்போது 42 பெண்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் பலர் இன்னும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இப்போது காபூலில் உள்ளூர் விமானப் பயணச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பெண் பயணிகளைச் சோதிக்க பெண் ஊழியர்கள் வேலைக்கு திரும்பி உள்ளனர்.

ராபியாவைப் போலவே பல பெண்கள் வேலைக்குச் செல்ல தயாராக இருப்பதாக கூறி இருக்கின்றார்கள். மருத்துவம் சார்ந்த பணிகள், ஆசிரியர் பணிகளுக்கு அதிக அளவில் பெண்களை தலிபான்கள் வேலைக்கு அமர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset