செய்திகள் உலகம்
அமெரிக்காவில் டிக் டாக் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி: அமலுக்கு வருகிறது தடை
வாஷிங்டன்:
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு சிதைககப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டிக் டாக் எனப்படும் செயலி உலகளவில் புகழ் பெற்றது.
இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியா உட்பட பல நாடுகள் இதற்கு தடை விதித்தது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.
இதை எதிர்த்து, அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் டிக் டாக் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக் கூறியுள்ளது.
இதனால் அமெரிக்காவில் இந்த செயலிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 18, 2025, 11:05 pm
மலேசிய நேரப்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு காசா போர் நிறுத்தம் தொடங்குகிறது
January 18, 2025, 8:56 pm
இலங்கையில் இன்று இரவு முதல் இடியுடன் கூடிய பெருமழை: வானிலை மையம் எச்சரிக்கை
January 18, 2025, 4:39 pm
ஜம்இய்யத்துல் உலமா சபையினர் இலங்கை பிரதமர் இடையில் சந்திப்பு
January 18, 2025, 11:59 am
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக வீழ்ச்சி
January 17, 2025, 12:18 pm
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
January 17, 2025, 10:04 am
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
January 16, 2025, 9:02 pm
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
January 16, 2025, 8:48 pm