நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக வீழ்ச்சி

பெய்ஜிங்:

2023 ம் ஆண்டில் சீனாவின் மொத்த மக்கள் தொகை பல தசாப்தங்களில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்தது. அதே ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உயர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 140 கோடியே 80 லட்சம் ஆனது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 13 லட்சம் குறைவு.

சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது.வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதால் இளைஞர்கள் தங்களுடைய திருமணத்தை ஒத்தி வைக்கின்றனர். மேலும் குழந்தை பிறப்பையும் தள்ளி போடுகின்றனர். வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவின் பாலின விகிதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. 100 பெண்களுக்கு 104.34 ஆண்கள் என பாலின விகிதம் உள்ளது. ராணுவம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில், சீனாவின் ஏற்கனவே பலவீனமான சமூக பாதுகாப்பு அமைப்பு தத்தளித்து வருகிறது. 

மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் 60 வயது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள்.இது மொத்த மக்கள் தொகையில் 22 %. 2035ல் இது 30 % தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset