நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை

டோஹா:

இந்த உடன்படிக்கை நடைமுறை- படுத்தப்படும் என்பதை கத்தர், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன.

முதல் கட்டம்:

6 வாரங்கள் நீளும் உடன்படிக்கையின் முதல் கட்டத்தில், ஹமாஸ் சிறைபிடித்துள்ள இஸ்ரேலியர்களில் பெண் இராணுவ வீரர்கள், குழந்தைகள், பொது மக்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 33 பேரை விடுதலை செய்யும். 

அதற்குப் பகரமாக,பெண் இராணுவத்தினர் ஒருவருக்கு 50 என்ற கணக்கிலும் மற்றவர்களில் ஒருவருக்கு 30 பேர் என்ற கணக்கிலும் இஸ்ரேல் சிறைபிடித்துள்ள ஃபலஸ்தீனியரை விடுதலை செய்யும். இந்தக் கணக்குப்படி, ஹமாஸ் விடுவிக்கும் 33 பேருக்கு ஈடாக இஸ்ரேல் 1000 பேர் அளவுக்கு விடுவிக்கும்.

அதன் பின்னர், இஸ்ரேல் சிறைபிடித்துள்ள ஃபலஸ்தீனியரில் பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் விடுவிக்கும். இந்த வகையில் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேல் சிறையிலிருந்து மீள்வர்.

இக்காலக்கட்டத்தில், வடக்கு கஸா முனைக்கு ஆயுதமில்லாத ஃபலஸ்தீனியர் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்படுவர். மேலும், பாதிக்கப்பட்ட கஸா முனைக்கு நிவாரண உதவிக்காக தினசரி 600 ட்ரக்குகளை இஸ்ரேல் அனுமதிக்கும்.

இரண்டாம் கட்டம்:

இரண்டாம் கட்டம் நடைமுறைபடுத்துவதற்கான நிபந்தனைகள் சரியாக நிறைவேற்றப்பட்டால், ஹமாஸிடம் இருக்கும் பிற கைதிகள் அனைவரும், முக்கியமாக ஆண் இராணுவத்தினர்  விடுவிக்கப்படுவர். 

இதற்கு ஈடாக, இஸ்ரேல் தாம் பிடித்துள்ள ஃபலஸ்தீன் கைதிகளில் மீதமுள்ள அனைவரையும் விடுவிக்கும். மேலும், கஸா முனையிலிருந்து இஸ்ரேல் படை முழுவதையும் விலக்கி கொள்ளும்.

மூன்றாம் கட்டம்:

இரண்டாம் கட்ட நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், கைதியாக்கப்பட்டவர்களில் இறந்தவர்களின் உடல்களை ஹமாஸ் கைமாறும். அதற்குப் பகரமாக, சர்வதேச மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட கஸா முனை திரும்ப கட்டியெழுப்ப 3-5 ஆண்டு மறு சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

- அப்துர் ரஹ்மான் ஜமாலுத்தீன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset