செய்திகள் மலேசியா
மாமனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி மகத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர்.
இந்நாளில் மட்டுமன்றி எல்லா நாளும் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர்கள் செய்துவரும் சேவை மகத்தானது. மேலும் ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும்.
மாணவர்கள் தங்கு தடையின்றி தரமான கல்வியை பெறுவதற்கு ஆசிரியர்கள் தங்களது கடமையை முறையாக செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பணியை திறம்படச் செய்ய வேண்டும்.
இந்நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 10:15 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 18, 2026, 9:32 pm
டத்தோஸ்ரீ நஜிப்பின் மன்னிப்பை அரசியலாக்க வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 18, 2026, 9:31 pm
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு மக்களுக்கு மிகவும் முக்கியமானது: பாஸ்
September 18, 2026, 5:06 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு: மாமன்னருக்கு மஇகா, மசீச நன்றி
September 18, 2026, 5:05 pm
பாறை இடிந்து விழுந்து இந்திய ஆடவர் மரணம்; குவாரி செயல் பாட்டை தற்காலிகமாக மூட உத்தரவு: டத்தோ சிவநேசன்
September 18, 2026, 5:03 pm
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்: ரபிசி
September 18, 2026, 5:03 pm
