நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலியர் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பப்பட்டனர்

கோலாலம்பூர்: 

இஸ்ரேலியர் துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் ருஸ்டி இசா இதனை உறுதிப்படுத்தினார்.

6 கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவர் ஷலோம் அவிட்டனுடன் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மலேசியாவில் தடை செய்யப்பட்ட குடியேற்றவாசிகளை மாற்றும் நடவடிக்கைக்காக குடிவரவுத் துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன் பின் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மூன்று பேரும் மலேசியாவிலிருந்து நேற்று அமெரிக்கா, துருக்கி, ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டனர் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset