
செய்திகள் மலேசியா
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்: சந்திரகுமணன்
மித்ரா நிதியை முடிப்பது சாதனை அல்ல; அத்திட்டத்தின்வழி மக்கள் உருமாற்றம் காண வேண்டும்
பூச்சோங்:
இந்தியர்களின் நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தவறி விட்டார்.
இது உண்மை தான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று மலேசிய பார் அமைப்பின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் இதனை கூறினார்.
நம்பிக்கையில் நெத்தியடி சிறப்பு நேரலையில் அவர் கூறியதாவது,
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது இந்திய சமுதாயம் மிகப் பெரிய நம்பிக்கையை கொண்டிருந்தது.
ஆனால் அந்த நம்பிக்கை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நம்பிக்கை மீண்டும் பெறுவதற்கு அவர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த தேர்தலில் இந்தக் கூட்டணி காணாமல் போய்விடும் என்று கூறினார்.
இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்காக தான் மித்ரா உருவாக்கப்பட்டு அதன் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது என்று கடந்தாண்டு கூறப்பட்டது.
இவ்வாண்டு 40 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டு விட்டது என கூறப்படது. பின் அது மறுக்கப்பட்டது.
என்னை பொருத்தவரையில் நிதி முடிக்கப்படுவது சாதனை அல்ல. அந்நிதி எதற்கு பயன்படுத்தப்பட்டது.
சமுதாயத்திற்கு எப்படி பயன் பெற்றது. அதன் வாயிலாக சமுதாயம் எப்படி உயர்வு கண்டது என்பது தான் முக்கியம்.
அந்த சாதனை அறிக்கை தான் பொதுவில் வெளிப்படுத்த வேண்டும்.
இதை நான் வலியுறுத்துகிறேன் என்று டத்தோ சந்திரகுமணன் கூறினார்.
இதனிடயே நம்பிக்கையின் நெத்தியடி சிறப்பு நேர்காணல் ஒவ்வொரு புதன்கிழமையும் நம்பிக்கையின் சமூக ஊடகத்தில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:32 am
நாடு முழுவதும் மின்னியல் சிகரெட்டிற்கு தடை விதியுங்கள்: பகாங் ஆட்சியாளர் நினைவுறுத்தல்
July 3, 2025, 11:05 am
தலைமை நீதிபதியின் அதிகாரங்களையும் கடமைகளையும் மலாயா தலைமை நீதிபதி நிரப்புவார்
July 3, 2025, 11:04 am
புதிய நியமனம் வரை ஹஸ்னா முஹம்மத் இடைக்காலத் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்
July 3, 2025, 10:48 am
தெலுக் இந்தான்: ங்கா-வை வீழ்த்த அவருக்கு இணையான வேட்பாளர் தேவை: ஆய்வாளர் கருத்து
July 3, 2025, 9:45 am