நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி பொது டென்னிஸ் போட்டி: காலிறுதி சுற்றில் ஸ்வியாடெக், சபலென்கா

ரோம்:

களிமண் தரை போட்டியான இத்தாலி பொது டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகின்றது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-ஆவது சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும், உலகத் தரவரிசையில் முதல் நிலையிலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கெர்பரை தோற்கடித்துக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் காலிறுதியில் மேடிசன் கீஸ்-வுடன் மோதவுள்ளார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 4-6, 6-1, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset