நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பைசாலின் சிகிச்சைக்கான செலவை  ஏற்கத் தயார்: தெங்கு அமிர் ஷா

ஷாஆலம்:

ஆசிட் தாக்குதலுக்கு ஆளான கால்பந்து வீரர் பைசால் ஹலிம் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்கத் தயார் என்று சிலாங்கூர் பட்டத்து இளவரசரும் மாநில கால்பந்து சங்கத்தின் தலைவருமான தெங்கு அமிர் ஷா கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பைசால் ஹலீம் மீது திராவகம் வீசப்பட்டது. இதில் அவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை தெங்கு அமிர் ஷா இன்று சந்தித்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடன் பேசிய அவர்,

பைசல் ஹலிமிற்கு சிறந்த சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே அவர் மருத்துவ காப்பீட்டை கொண்டிருந்தாலும், அவர் குணமடையும் வரை  சிகிச்சை, மருந்துவ செலவை ஏற்க தாம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset