நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ

டொரண்டோ: 

கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்

இந்தக் கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களான கரண் பிரார், கமல் பிரீத் சிங், கரன்பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது. இங்கு வலிமையான, சுதந்திரமான நீதித்துறை செயல்படுகிறது.

அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். 

நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் கைது விவகாரத்தைத் தாண்டியும் விசாரணை நடக்கும்.

நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து கனடாவில் உள்ள சீக்கியர்கள் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்தனர்.

இருப்பினும், ஒவ்வொரு கனடா குடிமகனும் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை இருக்கின்றது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset