நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் முதல் ஸ்மார்ட் மருத்துவமனையாக மாஹ்சா மருத்துவமனை விளங்கும்: டான்ஸ்ரீ ஹனிஃபா அறிவிப்பு

பண்டார் சௌஜானா புத்ரா:

நாட்டின் முதல் ஸ்மார்ட் (நவீன) மருத்துவமனையாக மாஹ்சா மருத்துவமனை விளங்கும்.

இம் மருத்துவமனை  விரைவில் கோலாகலமாக திறப்பு விழா காணும் என்று மாஹ்சா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் கூறினார்.

தாதியர் கல்லூரியின் வாயிலாக தனது மருத்துவக் கல்விப் பயணத்தை தொடங்கிய மாஹ்சா இன்று பண்டார் சௌஜானா புத்ராவில் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அனைத்துலகப் பள்ளி, கல்லூரி, பல்கல்கலைக்கழகம் என மாஹ்சா கல்வித் துறையில் பீடுநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் மாஹ்சா தற்போது பிரமாண்டமான முறையில் மருத்துவமனை  ஒன்றை கட்டியுள்ளது.

4 ஏக்கர் நிலத்தில் 6 மாடிகளுடன், 250 உள் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டில்கள் என அனைத்து அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவ சேவைகளுடன் வாரத்தில் 7 நாட்களுக்கு என 24 மணி நேரமும் இந்த மருத்துவமனை செயல்படும்.

சமுதாயத்திற்கான மருத்துவமனை  என்ற கோட்பாடுடன் இம் மருத்துவமனை செயல்படவுள்ளது.

குறிப்பாக மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே மாஹ்சா மருத்துவமனையின் குறிக்கோளாக உள்ளது.

ஸ்மார்ட்  என்ற அடிப்படையில் இம்மருத்துவமனை செயல்படும். 

நோயாளிகளின் பதிவு முதல் அனைத்து சேவைகளும் இணையம், ஆப்ஸ் வாயிலாக வழங்கப்படும்.

இந்த அனைத்து நவீன வசதிகளுக்கு மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

மேலும் கோல லங்காட் மாவட்டத்தில் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கும் முதல் மருத்துவமனையாக இது விளங்குகிறது.

மாஹ்சா மருத்துவமனையை நாடி வரும்  நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கப்படும்.

குறிப்பாக நியாயமான விலையில் மருத்துவ சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

இதன் அடிப்படையாக கொண்டு மாஹ்சா மருத்துவமனை செயல்படும் என்று டான்ஸ்ரீ ஹனிஃபா கூறினார்.

முன்னதாக இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாஹ்சா மருத்துவமனையின் தலைமை செயல்முறை இயக்குநர் டாக்டர் அனிதா கலந்துகொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset