நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது

கோலாலம்பூர்: 

மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

மருத்துவக் கல்வியை முடித்தவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. தற்போது அது 50 விழுக்காடுவரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால்  நாட்டில் போதுமான அளவில் மருத்துவர்கள் இல்லாமல் பொதுச்சுகாதாரக் கட்டமைப்பில் பிரச்சினைகள் எழக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

குறிப்பாக, மருத்துவப் பட்டக்கல்வியை முடித்தவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சின் தரவுகள்படி 2019ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்களின் எண்ணிக்கை 6,134ஆக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு அது 3,271ஆக குறைந்தது.

இந்த பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும், இதனால் மலேசிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset