நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல்ட்மேன் சாக்ஸ் செலுத்திய அபராதத்தில் ஒரு பகுதியை ஒப்படைக்க மலேசியா அமெரிக்காவிடம் கேட்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி

கோலாலம்பூர்:

கோல்ட்மேன் சாக்ஸ் செலுத்திய அபராதத்தில் ஒரு பகுதியை ஒப்படைக்க அமெரிக்காவிடம் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.

1 எம்டிபி சொத்துக்களை மீட்பு சிறப்புப் பணிக் குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ ஜொஹாரி கனி இதனை கூறினார்.

1 எம்டிபி வழக்கில் கோல்ட்மேன் சாக்ஸ் அபராத தொகையாக  2.9 பில்லியன் அமெரிக்க டாலரை செலுத்தியது.

இந்த அபராதத்தின் ஒரு பகுதியை ஒப்படைக்குமாறு மலேசியா அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி அமெரிக்க அதிகாரிகளுக்குச் செலுத்தும் தொகையிலிருந்து சில இழப்பீடுகளைப் பெற மலேசியா தகுதியானது என்றார்.

1 எம்டிபி நிதியை மீட்டெடுப்பதிலும் திருப்பி அனுப்புவதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை மலேசியா பாராட்டுகிறது.

ஆனால் மலேசியர்களிடமிருந்து திருடப்பட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட மிகக் குறைவு என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset