நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100 பெண்களுக்கு ஸ்வான் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி அளிப்பதையே பிகேஆர் மகளிர் பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது: ஃபட்லினா சிடேக் 

புத்ரா ஜெயா: 

பெண்களுக்கு ஸ்வான் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி அளிப்பதையே பிகேஆர் மகளிர் பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த நடவடிக்கையானது நாட்டில் பெண்களின் நுண்ணறிவை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படுவதாக அதன தலைவரும் கல்வியமைச்சருமான ஃபட்லினா சிடெக் கூறினார்.

இந்தத் திட்டத்தில் வயது மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் எல்லா பெண்களும் கலந்து கொள்ளலாம். 

நிறைய பெண்கள் அறிவியல் செயல்பாட்டின் பல பிரிவுகள் மற்றும் பரிமாணங்களைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். 

பிகேஆர் ஆலோசனைக் குழுவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலால் ஸ்வான் தொடங்கப்பட்டது.

விரைவில் அதற்கான பங்கேற்பைத் திறப்போம். அடுத்த மாதம் எந்தக் கல்விக் கட்டணமும் இல்லாமல் வகுப்புகள் செயல்படத் தொடங்கும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset