நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துருக்கிய போர் விமானத் தயாரிப்பில் பங்கேற்க மலேசியாவுக்கு அழைப்பு

கோலாலம்பூர்: 

துருக்கியின் ஐந்தாம் தலைமுறை தயாரிப்பான ‘கான்‘ போர் விமானத் திட்டத்தில் இணைந்து செயல்பட அந்நாடு மலேசியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த ‘கான்‘ போர் விமானம் கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவுக்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக இரு தரப்பும் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று துருக்கியின் துணை தற்காப்பு அமைச்சர் டாக்டர் செலல் சாமி தவுபிக் கூறினார்.

இந்தப் பங்காளித்துவம் இராணுவ ரீதியாக ஆற்றலை அதிகரிப்பதற்கு மட்டுமின்றி நவீன போர் விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். 

‘கான்‘ போர் விமானத் திட்டத்தில் கூட்டு பங்காளியாவது மலேசியாவுக்கு மிகவும் பயனளிக்கும். ‘கான்‘ ஐந்தாவது தலைமுறை போர் விமானம் என்பதோடு இதுவொரு மிகப்பெரிய திட்டமாகும்.

இத்திட்டத்தில் கூட்டு பங்காளியாகச் செயல்பட மலேசியா விருப்பம் தெரிவித்தால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவோம் என அவர் குறிப்பிட்டார்.

2024 ஆசிய தற்காப்பு சேவை மற்றும் தேசிய பாதுகாப்பு கண்காட்சியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் போர் விமானம் கடந்த 6ஆம் தேதி வெற்றிகரமாக இரண்டாவது முறையாக இங்குத் தரையிறங்கியதாக கூறிய அவர், இந்த விமானத்தைத் தரம் உயர்த்தும் பணிகளில் துருக்கிய வான் போக்குவரத்து தொழிலியல் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது என்றார் அவர்.

இந்தk ‘கான்‘ போர் விமானம் துருக்கியின் சொந்த தயாரிப்பாகும்.

ஆகாயப்படையின் ஆற்றலை வலுப்படுத்தும் அந்நாட்டின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவும் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கும் விதமாக இந்த விமானத் தயாரிப்பு அமைந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset