நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரியாத்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்

புத்ராஜெயா: 

இன்று தொடங்கி ஏப்ரல் 29-ஆம் தேதி வரை ரியாத்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கின்றார். 

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்-சௌதியின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வார் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றார். 

இக்கூட்டத்தில் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் மேம்பாடு என்ற கருப்பொருளில் நடைபெறும் கூட்டத்தில் நிலையான வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. 

உலகளாவிய வளர்ச்சிக்கான புதிய பார்வை என்ற கருப்பொருளோடு இந்தக் கூட்டம் தொடங்கும். 

அடுத்து, ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் கூட்டு பிராந்திய மூலோபாய உரையாடலின் அமர்வில் பிரதமர் முக்கிய உரையை ஆற்றுவார்.

மூலோபாய முன்னுரிமைகள்,தேசிய முன்முயற்சிகள், பொருளாதாரம்,நிதி வளர்ச்சி ,வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மலேசியா முன்னிலைப்படுத்த இந்த அமர்வு சிறப்பு வாய்ந்தது.

சவுதி அரேபியாவுக்கான இந்தப் பயணம் இரு தலைவர்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் இருதரப்பினரிடையே சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவுகின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset