நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் 

சென்னை:

ஆதாரில் இனி பெயர், முகவரி, புகைப்படம் என எந்த மாற்றம் செய்ய வேண்டுமானாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

கட்டணங்கள் எவ்வளவு?

ஒவ்வொரு மாற்றத்திற்கு ஏற்றவாறு கட்டணங்கள் மாறுபடும்.

பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை மாற்ற ரூ.50 செலுத்த வேண்டும்.

கை ரேகை, கருவிழி ஆகியவற்றை பதிவு செய்ய ரூ.100 கட்டணம்.

ஆதார் சேவை மையத்தில் இ-ஆதாரை ஆதார் அட்டையாக பெற ரூ.30 கட்ட வேண்டும்.

புதியதாக ஆதார் விண்ணப்பிப்பவர்களுக்கு எந்த கட்டணமும் கிடையாது.

ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை ஆதார் அட்டையை அப்டேட் செய்ய எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி வரை ஆதார் இணையதளத்தில் ஆவணங்களை அப்டேட் செய்ய எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இனி கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

ஆதார் மையத்தில் ஆவணங்களை அப்டேட் செய்ய ரூ.50 வசூலிக்கப்படும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset