நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்

தைபே:

தைவானில் அடுத்தடுத்து 80க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். 

கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு தைவான். புவியின் 2 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக தைவான் உள்ளது. 

இந்த நிலையில், தைவானில் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

80க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர். 

அதிபகட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதனால், தலைநகர் தைபே உள்ளிட்ட இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பலரும் திடிரென வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியில் உறைந்தனர். ஹூலைன் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதே இடத்தில் தான் கடந்த 3 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 14 பேர் பலியாகினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset