நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவின் மசாலாவில் நச்சுப் பொருள்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை

சிங்கப்பூர்:

இந்தியாவின் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்து தடை விதித்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.

இந்த நிறுவனமானது தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்துவருகின்ற நிலையில் இந்த மசாலாவை சந்தையிலிருந்து உடனடியாக திரும்பப்பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உணவு வாரியம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின் கீழ் மசாலாப் பொருட்களில் கிருமி நீக்கம் செய்ய எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள பொருட்களை உட்கொள்வதால் உடனடி ஆபத்துகள் எதுவும் இல்லை.

ஆனால், இது நீண்டகாலத்திற்கு உடல் நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அத்தோடு இந்த தயாரிப்புகளை வாங்கிய பயனீட்டாளர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset