நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா

புது டெல்லி: 

இஸ்ரேல், தெஹ்ரான், துபாய்க்கான விமான சேவைகளை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவ் நகருக்கும் தில்லிக்கும் இடையே இயக்கப்படும் விமான சேவைகள் ஏப்ரல் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தில்லி - இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கிடையே வாரம் 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அங்கு இயக்கப்படும் விமானங்கள் ஏப்ரல் 21ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணக்கட்டணம் ரத்து மற்றும் மறுஅட்டவணையின்போது ஒருமுறை மட்டும் சலுகை அளிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக மேற்கொள்ளப்படும் தேவையற்ற பயணங்களை சில நாள்களுக்குத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset