நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பு நாடாக்கும் தீர்மானம்: அமெரிக்கா ரத்து செய்தது

நியூயார்க்:

பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்கும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தையும் இணைப்பதற்கான வரைவுத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா கொண்டுவந்தது.

இதற்கு ஆதரவாக, கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகள் வாக்களித்தன. பிரிட்டனும் ஸ்விட்சர்லாந்தும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

எனினும், தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு அமெரிக்கா ரத்து செய்தது.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஐ.நா. பொதுச் சபையின் 194வது உறுப்பு நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

ஐ.நா. பொதுச் சபையில் பார்வையாளராக இருக்கும்  பாலஸ்தீனம் பொதுச் சபை நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க முடியும், வாக்கெடுப்புகளில் பங்கேற்க முடியாது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset