நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேச தடகள சங்கத்தின் குறுக்கோட்டப் போட்டியில் 2,500 போட்டியாளர்கள் பங்கேற்பு: டத்தோஶ்ரீ  புலேந்திரன்

கோலாலம்பூர்:

கூட்டரசுப் பிரதேச, கோலாலம்பூர் தடகள சங்கத்தின் குறுக்கோட்டப் போட்டியில் 2,500 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதனை அச்சங்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ  டாக்டர் வி. புலேந்திரன் கூறினார்.

கூட்டரசுப் பிரதேச, கோலாலம்பூர் தடகள சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இந்த குறுக்கோட்டப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான போட்டி வரும் ஜூலை 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் நடைபெறவுள்ளது.

15, 7, 5, 3 ஆகிய கிலோ மீட்டரில் இந்த போட்டி நடத்தப்படவுள்ளது.

இப்போட்டியில் கிட்டத்தட்ட 2,500 போட்டியாளர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் டோடோ நிறுவனம் இப்போட்டியின் முதன்மை ஆதரவாளராக உள்ளது.

இதை தவிர்த்து யூ மோபாய்ல், ஜொகூர்பாரு பெர்ஜாயா ஹோட்டல், பெர்ஜாயா ஹில்ஸ், ஏசிஸ் ஹோட்டல், கென்னி ரோஜர்ஸ், ஸ்டார்ஸ்பர்க், கோஸ்வே, போஸ்ஃபிட், மைலோ, 100 பிளஸ் உட்பட பல நிறுவனங்கள் இப்போட்டிக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளன.

இவ்வேளையில் அந்நிறுவனங்களுக்கு நன்றி.

மக்களிடையே ஆரோக்கியத்தையும் குறுக்கோட்டப் போட்டியின் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்த இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மலேசியர்கள் திரளாக வந்து இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

பதிவுக்கான இறுதி நாள் ஜூன் 10 என்று டத்தோஶ்ரீ  புலேந்திரன் கூறினார்.

முன்னதாக இன்றைய போட்டியின் அறிமுக விழாவிற்கு எஸ்டிஎம் ரோட்டரியின் துணை நிர்வாகி ஜியாம் சாய் கோன் கலந்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset