நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மேட்ரிட் பொது டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா

மேட்ரிட்:

அனைத்துலக மேட்ரிட் பொது டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகின்றது.

இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை சாரா டோர்மாவை எதிர்கொண்டார்.

இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை சாரா பிஜ்லெக்குடன் மோதினார்.

இதில் ரிபாகினா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, துனிசியாவின் ஒன்ஸ் ஜபேர் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset