நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 80 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset