நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் - ரியல்மாட்ரிட் சமநிலை

முனிச்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் பாயர்ன் முனிச் - ரியல்மாட்ரிட் அணிகள் சமநிலை கண்டன.

அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாயர்ன்முனிச் அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாயர்ன்முனிச் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியுடன் சமநிலை கண்டனர்.

பாயர்ன் முனிச் அணியின் கோல்களை லெரோய் சனே, ஹாரி கேய்ன் ஆகியோர் அடித்தனர்.

ரியல்மாட்ரிட் அணியின் இரு கோல்களை வினிசியஸ் ஜூனியர் அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset