நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மேட்ரிட் பொது டென்னிஸ்:  நடால், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மேட்ரிட்:

அனைத்துலக மேட்ரிட் பொது டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது.

இந்தத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை எதிர் கொண்டார். 

இதில் முதல் செட்டை 2-6 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். 

இதில் நடால் 7-6 (8-6), 6-3 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset