நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

23 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி; உஸ்பெகிஸ்தானிடன் மலேசியா தோல்வி 

கோலாலம்பூர்: 

கத்தாரில் நடைபெற்றும் வரும் 23 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் மலேசியா அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. டி குழு நிலையிலான ஆட்டத்தில் மலேசியா உஸ்பெகிஸ்தான் அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 

நாட்டின் தற்காப்பு ஆட்டக்காரர் முஹம்மத் ஷாஹிர் பாட்ஷா செய்த தவற்றின் காரணமாக உஸ்பெகிஸ்தான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. அத்துடன், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டக்காரர்களினால் மலேசியா மூன்று புள்ளிகளை வெற்றிக்கொள்வதில் தவறியது. 

மலேசியா அடுத்து வியாட்நாம் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் மலேசியா கட்டாயமாக வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மலேசியா இந்த போட்டியில் காலிறுதி சுற்றுவரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் இரு ஆட்டங்களிலும் மலேசியா சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியின் பயிற்றுநர் காரிடோ கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset