நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இளைஞர் சங்கங்கள், கிளப்புகள் தரமான உள்ளூர் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும்: எஃப் ஏ எம் 

கோலாலம்பூர்: 

நாட்டிலுள்ள இளைஞர் சங்கங்கள், கிளப்புகள் அனைத்தும் தரமான உள்ளுர் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் காற்பந்து துறையில் புதிய சாதனையைப் படைக்க இது ஏதுவாக இருக்கும் என்று மலேசிய காற்பந்து சங்கமான FAM கேட்டுக்கொண்டது. 

காற்பந்து நட்சத்திரத்தை உருவாக்க மலேசிய காற்பந்து சங்கம் இனியும் பள்ளிகளையோ மொக்தார் டஹாரி காற்பந்து அகாடெமியையோ நம்பியிருக்க வேண்டியதில்லை. இளைஞர் சங்கங்கள் இந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று FAM சங்கத்தின் போட்டி விளையாட்டு செயற்குழு நிர்வாகி முஹம்மத் ஃபிர்தாவுஸ் கூறினார். 

கடந்த காலங்களில் எந்தவொரு வசதிகளும் சலுகைகளும் இல்லாமல் பலம் பொருந்திய அணிகளை நாம் வீழ்த்தினோம். இப்போது தரமான உள்ளூர் விளையாட்டாளர்களை உருவாக்குவதில் பெரும் சவால்களை எதிர்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, FAM தலைமையில் நடைபெறும் காற்பந்து போட்டியின் அறிமுக விழா அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இரண்டாவது முறையாக இந்த காற்பந்து போட்டியை அச்சங்கம் ஏற்று நடத்துகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset