நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பார்சிலோனா பொது டென்னிஸ்: நடால் வெற்றி

பார்சிலோனா:

பார்சிலோனா பொது டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் முதல்நிலை ஆட்டக்காரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் இத்தாலியின் பிளவியா கோபாலியைச் சந்தித்து விளையாடினார். 

1 மணி 25 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கோபாலியைத் தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

காயத்தால் 3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய 37 வயதான நடால் வெற்றியோடு தொடங்கி இருக்கின்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 4-6, 6-7, 6-8 என்ற நேர் செட்டில் 87-ஆவது நிலை வீரரான அமெரிக்காவின் பிரன்டன் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset