நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்

அகமதாபாத்:

வில்-ஜெக்ஸ் - விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

இன்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களைக் குவித்தது.

அதிரடியில் மிரட்டிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு அணி சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர்.

டூ பிளசிஸ் 12 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலியுடன் வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்தத் ஜோடி அதிரடியாக ஆடியது.

இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மோஹித் சர்மா வீசிய 15-ஆவது ஓவரில் வில் ஜேக்ஸ் 29 ரன்கள் குவித்தார்.

இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

வில் ஜேக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்திய நிலையில் விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்றார்.

நடப்பு தொடரில் பெங்களூரு அணி 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset