நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றம்- தொடர் ஓட்டம் தொடங்கியது

ஏதென்ஸ்:

33-ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள்.

போட்டிக்கான 'கவுண்டவுன்' தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று நடந்தது.

வழக்கமாகச் சூரியஒளியைக் குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதிலிருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும்.

ஆனால் நேற்று ஒலிம்பியாவில் மேகமூட்டமான சீதோஷண நிலை நிலவியதால் சூரிய ஒளியைப் பார்க்க முடியவில்லை.

வானிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு ஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset