நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL 2024: SRH அணியின் ஹிமாலய ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் RCB அணி தோல்வி

பெங்களூரு: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்தது. 

அந்த ஹிமாலய ரன் குவிப்பைத் தொட முடியாமல் 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களுரு தோல்வி அடைந்தது.

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற முடியும் என்ற சிறிய ஆசை RCB ரசிகர்களிடம் தென்பட்டது. அவரது 83 ரன்கள் 35 பந்துகளில் எடுத்து அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஊட்டினார். அவர் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என்று நாலாபுறமும் விளாசினார்.

முன்னதாக, விராட் கோலி 40, டுபிளஸஸ் 63 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தாலும் ஹைதரபாத் அணியை வெல்ல ஓவருக்கு குறைந்தது 14.5 ரன்கள் அடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆர் சி பி அணி தள்ளப்பட்டது. இறுதியில் அந்த இலக்கை எட்ட முடியாமல் அது தோல்வியைத் தழுவியது.

ஹைதரபாத் அணியின் ஆட்டத்தில் முன்னதாக டிராவிஸ் ஹெட் 102 ரன்களை குவித்தார். இதன்மூலம் அந்த அணி புதிய ஐபிஎல் சாதனை படைத்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தேர்வு எத்தனை மோசமானது என்பதை ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் உணர்த்தினர். 

தங்களை நோக்கி வரும் பந்துகளை இருவரும் நையப் புடைத்தார்கள். அவர்களது விக்கெட் எடுக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணற 8 ஓவர்களுக்கு 108 ரன்களைச் சேர்த்தது இந்த இணை.

ரீசே டோப்லி வீசிய 9ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அணியின் ஸ்கோரை அனாயசமாக உயர்த்தினார். 8 சிக்சர்களை விளாசி 41 பந்துகளில் 102 ரன்களைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட்டை 13-வது ஓவரில் லாக்கி பெர்குசன் அவுட்டாக்கினார்.

ஆர்சிபிக்கு அந்த விக்கெட் பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

7 சிக்சர்களை விளாசி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கிளாசென் 67 ரன்களில் களத்திலிருந்து வெளியேறினார். 

அடுத்து வந்த அப்துல் சமத் - எய்டன் மார்க்ரம் கூட்டணி அமைத்து கடைசி நேரத்தில் சிக்ஸ், பவுண்டரி என விளாசித் தள்ள நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 287 ரன்களை குவித்து மிரட்டியது. 

ஆர்சிபி அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், ரீசே டோப்லி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset