நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.

செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.

நியூகாஸ்டல் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் சிப்பீல்டு யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset