நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது

ரோம்:

ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஏஎஸ் ரோமா அணியினர் உடினிசே அணியை சந்தித்து விளையாடினர்.

ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்த போது ஏஎஸ் ரோமா ஆட்டக்காரர் இவான் என்டிகா மயங்கி விழுந்தார்.

அவருக்கு மாரடைப்பு என உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்த ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

சான் சிரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் காக்லியாரி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியுடன் சமநிலை கண்டனர்.

இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் இந்தர்மிலான் அணியினர் 83 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset