நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

IPL 2024: மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

முலான்பூர்: 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய (ஏப்.13) போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஓப்பனர்களாக ஜானி பேர்ஸ்டோ - அதர்வ தைடே களமிறங்கினர்.
 
27 ரன்களைச் சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை 4வது ஓவரில் அவேஷ் கான் பிரித்தார். அதர்வ தைடே 15 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களில் கிளம்பினார். ஜானி பேர்ஸ்டோ 15 ரன்களுக்கு விக்கெட்டாக, சாம் கரன் 6 ரன்களில் அவுட்டானார்.

ஷசாங்க் சிங் 9 ரன்கள், ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் என நிலைக்காமல் கிளம்ப அஷுதோஷ் சர்மா மட்டும் அணியில் அதிகபட்ச ஸ்கோராக 31 ரன்களைச் சேர்த்தார். அவரின் 3 சிக்சர்கள் பெரும் நம்பிக்கையூட்டியது. இறுதியில் அவரும் விக்கெட்டாக 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 147 ரன்களைச் சேர்த்தது.
 
148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - தனுஷ் கோட்டியன் இருவரும் ஓபனிங் ஆடினர். இதில் ஜெய்ஸ்வால் 39 ரன்கள், தனுஷ் 24 என இந்த ஜோடி நிதானமாக தொடங்கியது.

அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்கள், ரியான் பராக் 23 ரன்கள் துருவ் ஜுரேல் ஆறு ரன்கள் என ஒவ்வொருவராக வெளியேற, ஷிம்ரோன் ஹெட்மயர் மூன்று சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் ராஜஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டார்.
 
19.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset