
செய்திகள் இந்தியா
கோலாலம்பூரில் இருந்து டில்லி வந்த பெண் பயணி விலை உயர்ந்த நகைகளுடன் பிடிப்பட்டார்
புதுடில்லி:
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டில்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அந்த பயணி வைத்திருந்த கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த கைப்பையும் மிகவும் விலை உயர்ந்தது என தெரியவந்தது.
இவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கான உரிய அனுமதியை அவர் பெறாததும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி அவர் நகைகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm