நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் பத்திரங்கள் விவரங்களை RTI இல் வெளியிட SBI மறுப்பு

புது டெல்லி: 

தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை  RTI சட்டத்தின் கீழ் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி SBI மறுத்துவிட்டது.

இதேபோல், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்பிஐக்கு ஆதரவாக வாதிட்ட மூத்தவழக்கறிஞர் ஹரிஷ் சால்வேக்கு அளிக்கப்பட்ட கட்டணம் குறித்த விவரங்களையும் அளிக்க எஸ்பிஐ மறுத்துவிட்டது.

ஆர்டிஐ ஆர்வலரான கமடோர் லோகேஷ் பாத்ரா, உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு தரவுகளையும் வழங்கக் கோரி மார்ச் 13-ல் எஸ்பிஐயிடம் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், ஆர்டிஐ சட்டப்படி தகவல்களை தர இயலாது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset