நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவை ஒன்றிணைக்கும் காங்கிரஸுக்கும் பிளவுப்படுத்தும் பாஜகவுக்குமான தேர்தல் இது: ராகுல்

புது டெல்லி: 

இந்த மக்களவைத் தேர்தல் இந்தியாவை ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரஸுக்கும், மக்களை பிளவுபடுத்த முயல்பவர்களுக்கும் இடையேயான தேர்தல் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸின தேர்தல் அறிக்கை நாட்டின் சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் "முஸ்லிம் லீக்' கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை பிரதிபலிக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், 2024 மக்களவைத் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியாகும்.

அதாவது, இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரஸுக்கும், மக்களவை பிளவுபடுத்த முயல்பவர்களுக்கும் இடையேயான போட்டி.

நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து, அவர்களைப் பலப்படுத்தியவர்கள் யார்? நாட்டின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடியவர்கள் யார்? என்பதற்கு வரலாறே சாட்சி.

"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் துணை நின்றது யார்?

இந்திய சிறைகள் அனைத்தும் காங்கிரஸ் தலைவர்களால் நிரம்பி வழிந்தபோது, நாட்டை பிளவுபடுத்திய சக்திகளுடன் இணைந்து மாநிலங்களில் ஆட்சியை நடத்தியது யார்?

எனவே, அரசியல் தளங்களில் பொய்களைப் பரப்புவதால் வரலாறு மாறிவிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset