நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை ஏற்றுமதி செய்யவிருக்கும் இந்தியா

புதுடெல்லி: 

சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை இந்தியாவின் தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு ஏற்றுமதி செய்ய இருக்கின்றது.

சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அமைப்புடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு அந்நாட்டின் ஐந்து முன்னணி கூட்டுறவு அமைப்புகளுக்குச் சொந்தமானது.

கூடிய விரைவில் மேலும் 2,000 டன் அரிசியைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 

ஏப்ரல் மாதத்தில் கப்பல் மூலம் அரிசி அனுப்பிவைக்கப்படும் என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அரிசி பற்றாக்குறை ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு ரூ. 1,325 கோடி மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு இதுவரை 250 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக திரு மேத்தா தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset