நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற குஜராத் பல்கலைக்கழகம் உத்தரவு

அகமதாபாத்:

குஜராத் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தொழுகை நடத்தியதால் தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற அந்தப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 300 வெளிநாட்டு மாணவர்கள் குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
விடுதியில் ரமலான் இரவு நேர தொழுகையில் முஸ்லிம் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.இது ஒரு தரப்பினருக்கு பிடிக்கவில்லை.

கடந்த மாதம் 16-ம் தேதி இரவு வலது சாரி அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கினர்.

இதில் இலங்கை, தஜிகிஸ்தானைச் சேர்ந்த 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Gujarat University Asks 7 Foreign Students To Vacate Hostel After Namaz Row

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, விடுதியில் தங்கியிருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 7 பேர் விடுதியை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு மாணவரும் படிப்பை முடித்து விட்டு, நிலுவையில் உள்ள நிர்வாக பணிகளுக்காக விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி நாடு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இனி அவர்கள் விடுதியில் முன்னாள் மாணவர்களாக தங்குவதற்கான தேவை இல்லை. அதனால் அவர்கள் விடுதியை காலி செய்யும்படி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset