நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளம்: சீனியர்களின் 29 மணி நேர ரேகிங் சித்ரவதையால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு

வயநாடு: 

கேரள மாநிலம் வயநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி ஜூனியர் மாணவர் சித்தார்த்தன் உயிரிழப்புக்கு சீனியர்களின் 29 நேர மணி நேரம் சித்திரவதைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி சித்தார்த்தனின் உடல் விடுதி கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது.

கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து
போலீஸார் கூறுகையில், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் 17-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து சித்தார்த்தனை சீனியர்கள் ரேகிங் சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சித்தார்த்தன், 18-ஆம் தேதி பிற்பகல்1.45 மணிக்கு விடுதி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

கேரளத்தில் இந்த விவகாரம் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த வழக்கில்  சிபிஐ 20 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset