நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வர்த்தக உரிமத்திற்காக உள்ளூர் வயதான பெண்களை திருமணம் செய்யும் அந்நிய நாட்டினர்

கோல திரெங்கானு:

வர்த்தக உரிமத்திற்காக அந்நிய நாட்டினர் வயதான உள்ளூர் பெண்களை  திருமணம் செய்யும் சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது.

திரெங்கானு குடிநுழைவுத் துறை இயக்குநர் அசார் அப்த் ஹமீத் இதனை தெரிவித்தார்.

வணிக உரிமம் உட்பட பல்வேறு அரசங்கத்தின் வசதிகளை அனுபவிக்க அந்நிய நாட்டினர் உள்ளூர் பெண்களை திருமணம் செய்யும் சம்பங்கள் திரெங்கானுவில் நடந்து வருகிறது.

வெளிநாட்டினரை திருமணம் செய்யும் உள்ளூர் பெண்கள் வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்ற பிறகு புறக்கணிக்கப்படுவது வழக்கம்.

மனைவி பெயரில் செய்யப்படும் அனைத்து வசதிகளையும் பெற்ற பிறகு, 

வெளிநாட்டு ஆண்கள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்து அவர்கள் தனித்தனியாக வாழ்கின்றனர்.

வெளிநாட்டினரை மணந்த சில உள்ளூர் பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு 300 ரிங்கிட் மட்டுமே செலவழிக்கப்படுவதை நாங்கள் நிராகரிக்கவில்லை.

வெளிநாட்டு ஆண்களின் தனிப்பட்ட நலன்களுக்கு உள்ளூர் பெண்களை பலிகடா ஆக்கும் சம்பவங்கள் சமூகம் மத்தியில் பரவி வருகிறது.

அதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று அவர் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset