நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒவ்வொரு இந்தியர் மீதும் ரூ.1.5 லட்சம் கடன்: பிரியங்கா காந்தி

புது டெல்லி:

ஒவ்வொரு இந்தியர் மீதும் ரூ.1.5 லட்சம் கடன்சுமை உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

இந்தநிலையில் பெரும் முதலாளிகள் பெற்ற கடன்களை மட்டும் பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்றார்.

மேலும், தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியதையடுத்து நீதிமன்றங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

நீதிமன்றங்களை அவமதிக்கவும்  நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும் சிலர் முயற்சித்து வருவதாக 600க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதினர். இதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மற்றவர்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பாரம்பரியம் என அக்கட்சி மீது குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா இவ்வாறு தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset