நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு 

தனுஷ்கோடி:

கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு நாள்தோறும் 10 அயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்த அலைகளால் தனுஷ்கோடி குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீா் புகுந்தது. 

மேலும் அரிச்சல்முனை செல்லும் சாலை சேதமடைந்தது.  இதையடுத்து, இங்கிருந்த க்யூ பிரிவு காவலா் நாராயணன் சக காவலருடன் சென்று அரிச்சல்முனையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்திருந்த வாகனங்களில் விரைந்து புறப்பட்டு அங்கிருந்து வெளியேறினாா். 

இந்த நிலையில் கடல் சீற்றம் இன்றும் அதிகரித்துள்ளதால் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து  ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம் காரணமாக 20 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன. தடுப்புகளைத் தாண்டி நெடுஞ்சாலைக்கு கடல் நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset